Singular Noun - ஒருமைப் பெயர்
பெயர்ச்சொல் ஒருமையாகவோ அல்லது பன்மையாகவோ இருக்கலாம். ஒரு நபரை, உயிரினத்தை, இடத்தை அல்லது பொருளைப் பற்றி நீங்கள் பேசும்பொழுது அது ஒருமைப் பெயர்.
an airplane - ஒரு விமானம்
a letter - ஒரு கடிதம்
a bicycle - ஒரு சைக்கிள்
a map - ஒரு வரைபடம்
a boy - ஒரு பையன்
a photograph - ஒரு புகைப்படம்
a bus - ஒரு பஸ் (பேருந்து)
a refrigerator - ஒரு குளிர்சாதனப்பெட்டி
a comb - ஒரு சீப்பு
a girl - ஒரு சிறுமி
a swing - ஓர் ஊஞ்சல்
a key - ஒரு சாவி/ திறப்பு
a van - ஒரு வான்
a ship - ஒரு கப்பல்
a woman - ஒரு பெண்
an owl - ஓர் ஆந்தை
a train - ஒரு ரயில் வண்டி / புகையிரதம் / தொடர்வண்டி
a flower - ஒரு பூ
ஒருமைப் பெயர்ச்சொல்லின் முன் ஒன்று என்பதைக் குறிப்பிடுவதற்காக a அல்லது an பாவிக்கப்படும். ஒருமைப் பெயர்ச்சொல்லின் தொடக்க எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் (a, e, i, o, u) ஓர் (ஒன்று) என்பதைக் குறிப்பிடுவதற்கு an பாவிக்கப்படும். காரணம் இரண்டும் உயிர் எழுத்து என்பதனாலாகும். அவை தவிர்ந்தவற்றுக்கு ஒரு (ஒன்று) என்பதைக் குறிப்பிடுவதற்கு a பாவிக்கப்படும். (தமிழில் உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் ஒரு என்று வராது, ஓர் என்று வருவது போன்று.)
an axe - ஒரு கோடாரி
an igloo - ஒரு குடில் (எஸ்கிமோக்களின் குடிசை)
an egg - ஒரு முட்டை
an orange - ஒரு தோடம்பழம்
an envelope - கடித உறை
an umbrella - ஒரு குடை
an ice cream - ஒரு ஐஸ் கிரீம்
-
ஆனால் சில பெயர்ச்சொற்களுக்கு விதிவிலக்காக a (an அல்ல) பாவிக்கப்படும்.
a uniform - சீருடை
a university - பல்கலைக்கழகம்
-
மெய்யெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு a (an அல்ல) பாவிக்கப்படும்.
a basket - ஒரு கூடை
a rainbow - ஒரு வானவில்
a bowl - ஒரு கிண்ணம்
a monster - ஓர் அரக்கன்
a car - ஒரு கார் / ஓர் ஊர்தி
a pillow - ஒரு தலையணை
a hill - ஒரு மலை
a watch - ஒரு கடிகாரம்
a house - ஒரு வீடு
a zoo - ஓர் உயிரியல் பூங்கா
-
ஆனால் சில பெயர்ச்சொற்கள் மெய்யெழுத்தில் தொடங்கினாலும் அவற்றுக்கு முன் an வராது a தான் வரும். காரணம் அந்தச் சொற்களின் தொடக்கத்தில் வரும் மெய்யெழுத்திற்கு உச்சரிப்பு இல்லை, அதற்கு அடுத்து வரும் உயிரெழுத்துக்கே உச்சரிப்பு உண்டு என்பதால்.
an heir - ஒரு வாரிசு
an honor - ஒரு மரியாதை
an hour - ஒரு மணித்தியாலம்
Plural Noun - பன்மைப் பெயர்
-
ஒன்று மேற்பட்ட நபர்கள், உயிரினங்கள், இடங்கள், அல்லது பொருட்கள் பன்மைப் பெயர்ச்சொல் எனப்படும். பொதுவாக அநேகமான பெயர்ச்சொற்கள் ஒருமைப் பெயர்ச்சொல்லின் முடிவில் (இறுதியில்) s சேர்த்து பன்மைப்பெயர்ச்சொல் ஆக்கப்படும்.
Singular
ஒருமை
bat
bird
broom
camel
cap
desk
doll
egg
fan
flower
fork
game
lamb
mug
nest
pen
photo
shirt
spoon
star
தமிழ்
வெளவால்
பறவை
விளக்குமாறு
ஒட்டகம்
தொப்பி
மேசை
பொம்மை
முட்டை
விசிறி/ரசிகர்
மலர்
முட்கரண்டி
விளையாட்டு
ஆட்டுக்குட்டி
குவளை
கூடு
பேனா
புகைப்படம்
சட்டை
கரண்டி
நட்சத்திரம்
Plural
பன்மை
bats
birds
brooms
camels
caps
desks
dolls
eggs
fans
flowers
forks
games
lambs
mugs
nests
pens
photos
shirts
spoons
stars
-
ஒருமைப்பெயர்ச்சொல்லின் முடியில் ch, sh, s, ss, x வரும்பொழுது அவற்றைப் பன்மையாக மாற்ற இறுதியில் -es சேர்க்கப்படும்.
Singular
ஒருமை
beach
branch
box
bus
bush
church
dish
dress
fox
glass
sandwich
watch
witch
தமிழ்
கடற்கரை
கிளை
பெட்டி
பஸ்
புதர்
தேவாலயம்
உணவு/தட்டு
ஆடை
நரி
கண்ணாடி
ரொட்டி
கைக்கடிகாரம்
மந்திரவாதி
Plural
பன்மை
beaches
branches
boxes
buses
bushes
churches
dishes
dresses
foxes
glasses
sandwiches
watches
witches
-
ஒருமைப் பெயர்ச்சொல்லின் இறுதியில் y வரும்பொழுது இறுதியில் வரும் y ஆனது i ஆக மாற்றப்பட்டு அதனுடன் es சேர்க்கப்படும்.
-
ஆனால் அந்த ஒருமைப்பெயரின் ஈற்றில் வரும் y இற்கு முன் உயிரெழுத்து (a, e, i, o, u) எதுவும் இல்லாதிருந்தால் மட்டுமே அப்படி மாறும்.
Singular
ஒருமை
baby
butterfly
canary
cherry
diary
dictionary
fairy
family
fly
lady
library
lily
party
puppy
story
strawberry
தமிழ்
குழந்தை
பட்டாம்பூச்சி
குருவி
செர்ரி
நாட்குறிப்பு
அகராதி
தேவதை
குடும்பம்
ஈ
பெண்
நூலகம்
அல்லி
கட்சி
நாய்க்குட்டி
கதை
ஸ்ட்ராபெர்ரி
Plural
பன்மை
babies
butterflies
canaries
cherries
diaries
dictionaries
fairies
families
flies
ladies
libraries
lilies
parties
puppies
stories
strawberries
-
ஆனால் அந்த ஒருமைப்பெயரின் ஈற்றில் வரும் y இற்கு முன் உயிரெழுத்து (a, e, i, o, u) வருமாயின் பன்மையாகும் பொழுது -s சேர்க்கப்படும்.
Singular
ஒருமை
boy
chimney
cowboy
day
donkey
jersey
key
kidney
monkey
toy
tray
trolley
turkey
valley
தமிழ்
சிறுவன்
புகைபோக்கி
கவ்பாய்
நாள்
கழுதை
ஜெர்சி (மேற்சட்டை)
சாவி
சிறுநீரகம்
குரங்கு
பொம்மை
தட்டில்
தள்ளுவண்டி
வான்கோழி
பள்ளத்தாக்கு
Plural
பன்மை
boys
chimneys
cowboys
days
donkeys
jerseys
keys
kidneys
monkeys
toys
trays
trolleys
turkeys
valleys
-
ஒருமைப் பெயர்ச்சொல்லின் இறுதியில் f, fe வரும்பொழுது இறுதியில் வரும் f ஆனது v ஆக மாற்றப்பட்டு அதனுடன் es சேர்க்கப்படும். ஆனால் அந்த ஒருமைப்பெயரின் ஈற்றில் வரும் f இற்கு முன் உயிரெழுத்து (a, e, i, o, u) எதுவும் இல்லாதிருந்தால் மட்டுமே அப்படி மாறும்.
Singular
ஒருமை
calf
elf
half
knife
leaf
life
loaf
shelf
thief
wife
wolf
தமிழ்
கன்று
குட்டிச்சாத்தான்
அரை
கத்தி
இலை
வாழ்க்கை
அப்பம்
அலமாரி
திருடன்
மனைவி
ஓநாய்
Plural
பன்மை
calves
elves
halves
knives
leaves
lives
loaves
shelves
thieves
wives
wolves
-
ஆனால் giraffe, cliff, sheriff போன்ற சில சொற்கள் பன்மையாகும்போது விதிவிலக்காக இறுதியில் s மட்டுமே சேர்க்கப்பட்டும்.
-
அநேகமாக ஒருமைப்பெயரின் ஈற்றில் வரும் f இற்கு முன் உயிரெழுத்து (a, e, i, o, u) ஏதேனும் இருப்பின் -s சேர்க்கப்பட்டும்.
Singular
ஒருமை
chef
chief
handkerchief
roof
தமிழ்
சமையல்காரர்
தலைவர்
கைக்குட்டை
கூரை
Plural
பன்மை
chefs
chiefs
handkerchiefs
roofs
-
-f ஈற்றில் வரும் சில ஒருமைப்பெயர்கள் இரண்டு விதமாகவும் மாறும்.
Singular
ஒருமை
dwarf
hoof
scarf
தமிழ்
குள்ளர்கள்
விலங்குகளின் குளம்பு
தாவணி
Plural
பன்மை
dwarfs or dwarves
hoofs or hooves
scarfs or scarves
-
ஈற்றில் o வரும் ஒருமைப்பெயர்களுக்க ு es சேர்க்கப்படும்.
Singular
ஒருமை
தமிழ்
a flamingoa tomatoa
potatoa
hero
பிளமிங்கோஸ் (ஒருலித பறவை)
தக்காளி
உருளைக்கிழங்கு
பாராட்டத்தக்கவன்
Plural
பன்மை
flamingoes
tomatoes
potatoes
heroes
-
ஆனால் சில சொற்கள் விதிவிலக்காக ஈற்றில் o வந்தாலும் அவற்றிற்கு s சேர்க்கப்படும்.
Singular
ஒருமை
a kangaroo
a hippo
a video
a rhino
a zoo
தமிழ்
ஒரு கங்காரு
ஒரு நீர்யானை
ஒரு வீடியோ
ஒரு காண்டாமிருகம்
ஓர் உயிரியல் பூங்கா
Plural
பன்மை
kangaroos
hippos
videos
rhinos
zoos
-
o ஈற்றில் வரும் சில சொற்கள் s அல்லது es சேர்க்கப்பட்டு இரண்டு விதமாகவும் மாறும்.
Singular
ஒருமை
a mango
a mosquito
a zero
a buffalo
தமிழ்
ஒரு மாம்பழம்
ஒரு கொசு
ஒரு பூஜ்யம்
ஓர் எருமை
Plural
பன்மை
mangoes / mangos
mosquitoes / mosquitos
zeroes / zeros
buffaloes / buffalos
-
‑us இல் முடிவடையும் (பிற மொழிச் சொற்கள்) பெயர்ச்சொற்கள் பன்மையாகும் போது ‑i சேரும்.
cactus – cacti - கற்றாழை
focus – foci - குவியம்
-
‑is இல் முடிவடையும் (பிற மொழிச் சொற்கள்) பெயர்ச்சொற்கள் பன்மையாகும் போது ‑es சேரும்.
analysis – analyses - ஆய்வு
ellipsis – ellipses - நீள்வட்டம்
-
‑on இல் முடிவடையும் (பிற மொழிச் சொற்கள்) பெயர்ச்சொற்கள் பன்மையாகும் போது ‑a சேரும்.
phenomenon – phenomena - நிகழ்வு / அதிசய சம்பவம்
criterion – criteria - கட்டளை விதிகள் / பிரமாணம்
-
சில ஒழுங்கற்ற பெயர்ச்சொற்கள் சொற்கள் பன்மையில் விதிவிலக்காக மாறுபட்டு வரும்.
Singular
ஒருமை
child
foot
goose
man
mouse
ox
tooth
woman
தமிழ்
குழந்தை
கால் / அடி
வாத்து
மனிதன்
சுட்டி / எலி
மாடு
பல்
பெண்
Plural
பன்மை
children
feet
geese
men
mice
oxen
teeth
women
-
சில சொற்கள் ஒருமையிலும் பன்மையிலும் மாறாமல் அப்படியே பாவிக்கப்படும்.
Singular
ஒருமை
bison
deer
fish
reindeer
sheep
தமிழ்
பைசன் (ஒருவகை காட்டு எருமை)
மான்
மீன்
கலைமான்
ஆடு
Plural
பன்மை
bison
deer
fish
reindeer
sheep
-
நீங்கள் fish என்பதை fishes என்று பலவிதமான மீன்களைப் பற்றிக் கூறும்பொழுது பாவிக்கலாம்.
உதராணமாக: இந்துசமுத்திரத்திலுள்ள மீன் வகைகள் -
சில பெயர்ச்சொற்கள் எப்பொழுதுமே ஆங்கிலத்தில் பன்மையாகவே பாவிக்கப்படும். காரணம் அவை (சோடி) இரட்டையாகவே உள்ளன.
English
pants
scissors
pyjamas
sneakers
shorts
slippers
trousers
stockings
sandals
binoculars
goggles
pliers
jeans
spectacles
glasses
scissors
tights
தமிழ்
காலுறை
கத்தரிக்கோல்
தளர்த்தியான காற் சட்டை
காலணி
குறும்படம்
செருப்பு
கால்சட்டை
காலுறைகள்
செருப்பு
தொலைநோக்கி
பாதுகாப்பு கண்ணாடி
இடுக்கி
ஜீன்ஸ் (வன் துணியாடை)
மூக்குக் கண்ணாடி,
கண்ணாடி
கத்தரிக்கோல்
காற்சட்டை (இறுக்கமான காற்சட்டை)
-
a pair of (ஒரு சோடி) என்பதை இவைகளுக்கு முன்னால் பாவித்து இவற்றைப் பன்மையாகப் பாவிக்கவலாம்.
English
a pair of binoculars
a pair of spectacles
a pair of goggles
a pair of jeans
a pair of shorts
a pair of pliers
a pair of shoes
a pair of scissors
தமிழ்
தொலைநோக்கி
மூக்குக் கண்ணாடி
கண்ணாடிகள்
ஜீன்ஸ்
குறும்படங்கள்
இடுக்கி
காலணிகள்
கத்திரிக்கோல்
-
இதைவிட
a person (ஒரு நபர்) two people (இரண்டு பேர்) / some people (சில மக்கள்) / a lot of people (நிறைய மக்கள்) முதலியன
She is nice person. - அவள் மிகவும் நல்லவள்.
-
ஆனால்
They are nice people. - அவர்கள் நல்ல மக்கள். (nice persons என்று பன்மையில் பாவிக்கக் கூடாது. ஒருவராக இருந்தால் nice person என்று பாவிக்கலாம்)
people (=they) என்பது பன்மை, எனவே people are, people have என்றுதான் பாவிக்கப்படும்.
I like the people here. They are very friendly.
இந்த மக்களை எனக்குப் பிடித்திருக்கிறது. இவர்கள் மிகவும் நட்பானவர்கள்.
police என்பது பன்மை.
The police are here - பொலிசார் இங்கு உள்ளனர்
ஆனால் ஒரு பொலிஸ்காரன் 'a police man’ என்று சொல்லலாம்.