இந்த இணையத்தை இளம் சந்ததியினரின் நன்மை கருதி உருவாக்கியுள்ளேன். பெரியவர்களுக்கும் கூட இந்த இணையம் உதவக்கூடும். கணனி அறிவை மேலும் வளர்ப்பதற்கும், தமிழ் மொழியைக் கற்பதற்கும், ஆங்கில மொழியைக் கற்பதற்கும் மேலும் கவிதைகள், வாழ்த்துக்கள் போன்றவற்றைப் பிரசுரிப்பதற்கும் இந்த இணையம் உதவும். நான் தனித்து இயங்குவதால் எனக்குள் எழுந்துள்ள பல சிந்தனைகளை வெளிக்கொணர்வதற்கு கூடிய காலதாமதம் எடுக்கின்றது.
Adobe Photoshop, InDesign, Illustrator, Premiere, CorelDraw போன்ற சில மென்பொருள்களை இயக்கும் முறைபற்றி ஒளிநாடா (Video) மூலம் கற்பிக்கவும் எண்ணியுள்ளேன். அதற்கு என்னிடம் தற்சமயம் உள்ள கணனி வசதிக் குறைவாகவுள்ளது. மிகக் கூடிய விரைவில் அவற்றையும் பிரசுரிக்க உத்தேசித்துள்ளேன்.
உங்கள் அபிப்பிராயங்களை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது முகநூலிலோ தெரிவிக்கலாம். எனக்கு ஒத்துழைப்பு நல்க விரும்பும் நல்லுள்ளங்கள் என்னுடன் தொடர்புகொண்டு இச்சேவையில் தங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இது முற்றிலும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச இணையத்தளம் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி!
மா.ஸ்ரீஸ்க்கந்தராஜன்
About Our Site
Founder
