Pronoun - பிரதிப்பெயர்
பிரதிப்பெயர் என்றால் ஒரு பெயர்ச்சொல்லிற்குப் பதிலாக உபயோகிக்கப்படும் பெயர்ச்சொல்லாகும். அதாவது ஒரு பெயரை மீண்டும் மீண்டும் பாவிக்காமல் அதற்குப் பிரதியிட்டு உபயோகிக்கும் சொல்லாகும்.
-
This is my father. He is a teacher. = இது எனது தந்தை. இவர் ஓர் ஆசிரியர்.
இங்கே .முதலிலுள்ள வசனத்தில் வருகின்ற எனது "தந்தை" என்ற சொல்லிற்குப் பதிலாக இரண்டாவதாக வரும் வசனத்தில் "இவர்" எனப் பாவிக்கப்படுகின்றது. எனவே "இவர்" என்பது பிரதிப்பெயர் எனப்படுகின்றது. அப்படியில்லாவிடில் "He" என்பதற்குப் பதிலாக மீண்டும் "My father" என்று பாவிக்க வேண்டிவரும், அது தவறாகும்.
பிரதிப்பெயா்கள்
-
தனிப்பட்ட பிரதிபெயர்கள் (Personal Pronouns),
-
வெளிப்படுத்துகின்ற பிரதிபெயர்கள் (Demonstrative Pronouns),
-
வினைப் பிரதிபெயர்கள் (Reflexive Pronouns),
-
வினாப் பிரதிபெயர்கள் (Interrogative Pronouns),
-
உறவுப் பிரதிபெயர்கள் (Relative Pronouns),
-
வரையற்ற பிரதிபெயர்கள் (Indefinite Pronouns) என வகைப்படுத்தப்படுகின்றன.
தனிப்பட்ட பிரதிபெயர்களை - Personal Pronouns (அகநிலை பிரதிபெயர்கள்)
-
எழுவாய்ப் பிரதிபிபெயா் (Subjective / Nominative Pronouns),
-
(குறிக்கோள்) செயப்படுபொருள் பிரதிபெயர்கள் (Objective / Accusative Pronouns),
-
உடைமைப் பிரதிப்பெயர்கள் (Possessive Pronouns) என மூன்று வகைகளாக வகுக்கலாம்.
எழுவாய்ப் பிரதிபிபெயா் - Subjective / Nominative Pronouns
ஒரு வசனத்தில் எழுவாயாக வருகின்றதனால் இவை Subjective Pronouns என அழைக்கப் படுகின்றன.
-
She is intelligent = அவள் புத்திசாலி.
-
They are playing chess. = அவர்கள் சதுரங்கம் விளையாடுகிறாா்கள்.
-
He sent me a letter. = அவன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினான்.
-
It is raining. = மழை பெய்கிறது.
இங்கே She, They, He, It என்பன வசனத்தின் எழுவாயாக வருகின்றன. எனவே இவை Subjective pronouns என அழைக்கப்படுகின்றன.
Singular = ஒருமை
1st Person = தன்மை
2nd Person =முன்னிலை
3rd Person = படர்க்கை
I = நான்
You (Thou) = நீ
He = அவன் / அவர்
She = அவள் / அவர்
It = அது / இது
Plural = பன்மை
We = நாங்கள்
You = நீங்கள்
They = அவர்கள் / இவர்கள் /
அவைகள் / இவைகள்
-
நீ என்பதற்கு "Thou" என்று பாவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது வழக்கில் இல்லை. சேக்ஸ்பியர் காலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. எனவே "You" என்பது ஒருமைக்கும், பன்மைக்கும் வருவதால் அது பன்மையாகவே கருதப்படும். இதை நீங்கள் தெரிந்திருந்தாற்றான் பின்னர் வினைச்சொற்களைப்பற்றி படிக்கும்போது விளங்கிக்கொள்வதற்கு இலகுவாக அமையும்.
செயப்படுபொருள் பிரதிபெயர்கள் - Objective / Accusative Pronouns
ஒரு வசனத்தில் வருகின்ற வினைச்செல்லின் செயப்படுபொருளாக வருகின்றதனால் இவை "Objective Pronouns" என அழைக்கப்படுகின்றன.
-
I met him yesterday. = நான் அவனை நேற்று சந்தித்தேன்.
-
He gave her a gift. = நான் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தேன்.
-
The teacher appreciated them. = ஆசிரியர் அவர்களைப் பாராட்டினாா்.
இங்கே him, her, them என்பன வசனத்தின் செயப்படுபொருளாக வருகின்றன. எனவே இவை Objective pronouns என அழைக்கப்படுகின்றன.
Singular = ஒருமை
Plural = பன்மை
1st Person = தன்மை
2nd Person =முன்னிலை
3rd Person = படர்க்கை
me = என்னை, எனக்கு
you (thee) = உன்னை உனக்கு
him = அவனை, அவனுக்கு/ அவரை, அவருக்கு
her = அவளை, அவளுக்கு/ அவரை, அவருக்கு
it = அதை, அதற்கு/ இதை, இதற்கு
us = எங்களை, எங்களுக்கு
you = உங்களை, உங்களுக்கு
them = அவர்களை, அவர்களுக்கு /
இவர்களை, இவர்களுக்கு /
அவைகளை, அவைகளுக்கு /
இவைகளை, இவைகளுக்கு
உடைமைப் பிரதிப்பெயர்கள் - Possessive Pronouns
இவை உடைமையைக் குறிக்கின்றமையால், அதாவது யாருடையது அல்லது எதனுடையது என்பதை உணர்த்துவதால் Possessive Pronouns என அழைக்கப்படுகின்றன.
-
This is my pen. This pen is mine. = இது என்னுடைய பென். இந்தப் பென் என்னுடையது.
-
Those are her books. Those books are hers. = அவை அவளுடைய புத்தகங்கள். அந்தப் புத்தகங்கள் அவளுடையவை.
-
That is our car over there. That car over there is ours. = அங்கே நிற்கின்றது எங்களுடைய கார். அங்கே நிற்கின்ற கார் எங்களுடையது.
இங்கே my, mine, her, hers, our, ours என்பன யாருடையதென்பதை உணர்த்துவதால் அவை Possessive Pronouns என அழைக்கப்படகின்றன.
Singular = ஒருமை
Plural = பன்மை
1st Person = தன்மை
2nd Person =முன்னிலை
3rd Person = படர்க்கை
my, mine = என்னுடைய, என்னுடையது
your, yours (thy, thine) = உன்னுடைய உன்னுடையது
his = அவனுடைய, அவனுடையது / அவருடைய, அவருடையது
her = அவளுடைய/அவருடைய, hers அவளுடையது/அவருடையது
its = அதனுடைய, அதனுடையது / இதனுடைய, இதனுடையது
our = எங்களுடைய, ours= எங்க
ளுடையது
your = உங்களுடைய, yours= உங்களுடையது
their= அவர்களுடைய / இவர்களுடைய / அவைகளுடைய /இவைகளுடைய theirs= இவர்களுடையது / அவர்களுடையது / அவைளுடையது / இவைளுடையது
கீழேயுள்ள அட்டவணையில் சேக்ஸ்பியர் காலத்திலிருந்த சொற்களைத் தந்திருக்கிறேன். அதில் முன்னிலை ஒருமையில் வருவதைத் தவிர்த்து முன்னிலை பன்மையில் வருவதையே ஒருமைக்கும் பாவித்தால் இப்போதுள்ள ஆங்கில இலக்கணமாகிவிடும்.
Nominative
எழுவாய்
1st Person = தன்மை
2nd Person =
முன்னிலை
3rd Person = படர்க்கை
I
We
Thou
Ye/You
He/She/It
They
singular:
plural:
singular:
plural:
singular:
plural:
Objective
செயப்படுபொருள்
Possessive
உடைமை
Me
Us
Thee
You
Him/Her/It
Them
My (or Mine)
Our (or Ours)
Thy (or Thine)
Your (or yours)
His/her or Hers/Its
Their (or Theirs)
வெளிப்படுத்துகின்ற பிரதிபெயர்கள் - Demonstrative Pronouns
this, that, these, those என்பன Demonstrative Pronouns என அழைக்கப்படுகின்றன. இவை எதைப்பற்றிப் பேசப்படுகின்றது என்பதை அல்லது அருகிலோ தூரத்திலோ என்பதை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களாக அமைகின்றன.
-
What is this? = இது என்ன?
-
That is a tea kettle. = அது ஒரு தேநீர் கெற்றில்.
-
Do not move these? = இவற்றை அகற்ற வேண்டாம்.
-
Those are not yours. = அவை உன்னுடையவையல்ல.
-
This is my house. = இது என்னுடைய வீடு.
-
That is our car over there. = அங்கே நிற்பது எங்களுடைய காா்.
-
These are my colleagues in this room. = இந்த அறையிலுள்ளவர்கள் எனது சகாட்கள்.
-
Those are beautiful flowers in the next field. = அங்கே அடுத்த காணியிலுள்ள பூக்கள் அழகானவை.
வினை பிரதிபெயர்கள் - Reflexive Pronouns
இவை வினைச்சொல்லின் செயற்பாட்டை எழுவாய் பெற்றுக்கொள்ளும் விதத்தினை வெளிப்படுத்துகின்றன.
Singular: myself yourself himself herself itself
Plural: ourselves yourselves themselves
Singular = ஒருமை
1st Person = தன்மை
2nd Person =முன்னிலை
3rd Person = படர்க்கை
I -> myself = நானே, என்னையே, எனக்கே
you -> yourself= உன்னை, உன்னையே, நீயே, நீயேதான்
he -> himself = அவனை, அவனே, தன்னை, தானே
she -> herself = அவளை, அவளே, தன்னை, தானே
it -> itself= அதை, அதுவே, தன்னை, தானே
Plural = பன்மை
we -> ourselves = நம்மை, நாமே, எங்களையே, நாங்களே
you -> yourselves = உங்களை, உங்களையே, நீங்களே
they -> themselves = அவர்களை, அவர்களே, தம்மை, தாமே, தமக்கே
-
Kannan accidently hit himself in the head. = கண்ணன் தற்செயலாக தன்னையே அடித்தான்.
-
The students shouldn’t have laughed at the teacher, but couldn’t stop themselves. = மாணவர்கள் ஆசிரியரைப் பாா்த்து சிரித்தார்கள், ஆனால் அவர்களால் தங்களை நிறுத்த முடியவில்லை.
-
We often ask ourselves why we left London. = நாம் லண்டன் விட்டு வந்தோமென்று அடிக்கடி நம்மை நாமேகேட்கிறோம்.
-
He spoke to himself. = அவர் தன்னை பேசினார். / அவர் தானே பேசினார்.
-
I made this cake myself. = இந்தக் கேக்கை நானே செய்தேன்.
-
Be careful with the knife. You’ll cut yourself. = கத்தியோடு கவனமாக இரு. நீயாகவே வெட்டிவிடுவாய்.
-
Kannan is looking at himself in the mirror. = கண்ணன் கண்ணாடியில் அவனையே (தன்னையே) பாா்க்கிறான்.
-
Rubi has hurt herself. = றூபி தானாகவே காயப்படுத்திக்கொண்டாள்.
-
Our cat washes itself after each meal. = எங்களுடைய பூணை சாப்பிட்ட பின்னர் தானாகவே கழுவிக்கொள்ளும்.
-
We organized the party all by ourselves. = நாங்கள் எல்லோரும் இந்த விருந்தை நாங்களே ஏற்பாடு செய்தோம்.
-
Come in, children, and find yourselves a seat. = குழந்தைகளே உள்ளே வந்து நீங்களே இருப்பிடத்தைப் பிடியுங்கள். (இந்த வசனத்தில் you என்பது தோன்றா எழுவாய்.)
-
Baby birds are too young to look after themselves. = குஞ்சுப்பறவைகள் தாம்மைத் தாமே பராமரித்துக்கொள்ள மிகச் சிறியவை.
இங்கே எழுவாய்க்கும் எழுவாய் செய்கின்ற செயற்பாட்டிற்குமான தொடர்பைக் காட்டுவது Reflexive Pronouns எனப்படுகின்றது.
கேள்விக்குரிய பிரதிபெயர்கள் - Interrogative Pronouns
இவை வினாக்களை வினவுவதற்குப் பயன்படுகின்றன.
-
which = எது, எந்த
-
what = என்ன
-
who = யாா்
-
whom = யாரை, யாருக்கு
-
whose = யாருடைய
-
whoever = யாரேனும், எவரேனும்
-
whatever = ஏதாயினும், எதுவாகிலும்
-
whichever = எதுவாயினும்
-
Which of these bags is yours? = இவற்றில் எது உன்னுடைய பை?
-
Which do you prefer? = எதை நீ விரும்புகிறாய்?
-
What is your dog’s name? = உன்னுடைய நாயின் பெயர் என்ன?
-
What are you talking about? = எதைப்பற்றி நீ பேசுகிறாய்?
-
What is the time? = என்ன நேரம்?
-
Who is he talking to? = யார் அவர் பேசுகிறார்?
-
Who are those people? = இந்த மனிதர்கள் யார்?
-
Whom are you playing with? = நீ யாருடன் விளையாடுகிறாய்?, யாரிடம் விளையாடுகிறாய்?
-
Whom is he talking to? = யாரை அவர் பேசுகிறார்?, யாருக்கு அவர் பேசுகிறார்?
-
Whose is this umbrella? = இந்தக் குடை யாருடையது?
-
Whose are these gloves? = இந்தக் கையுறைகள் யாருடையது?
-
Whoever can it be? = யாராக இருக்க முடியும்?
உறவுப் பிரதிபெயர்கள் - Relative Pronouns
இவை வசனத்திலுள்ள உட்பிரிவுகளுக்கிடையில் அல்லது சொற்றொடர்களுக்கிடையில் உள்ள தொடர்பை விவரிக்கப் பயன்படுகின்றன.
-
that = என்று, என, அந்த, அது
-
which = எது, எந்த, யார், அது
-
what = என்ன, எந்த, எதுவோ அது,
-
who = யாா், அவர்,
-
whose = யாருடைய, எவருடைய, எவனுடைய
-
whom = யாரை, எவரை, எவனை
-
The tickets that I bought for the concert were expensive. = நான் அந்த நிகழ்ச்சிக்கு வாங்கிய டிக்கெட் விலை மிகுந்தன.
(அந்த டிக்கெட் எதை நான் நிகழ்ச்சிக்காக வாங்கினேனோ விலை மிகுந்தன.)
-
I want the house, which is brick. = எனக்கு செங்கல் வீடு வேண்டும்.
(எனக்கு வேண்டும் வீடு, எது செங்கல்லால் ஆனதோ.)
-
Jack ordered the meal that we picked up. = ஜாக் நாங்கள் எடுத்த உணவை உத்தரவிட்டாா்.
(ஜாக் உணவை உத்தரவிட்டாா் எதை நாங்கள் எடுத்தோமோ அந்த உணவை.)
-
Freddie is the girl who won the contest. = பிரட்டி போட்டியில் வெற்றி பெற்ற சிறுமி.
( பிரட்டி அந்த சிறுமி யாா் போட்டியில் வெற்றி பெற்றரோ.)
-
Jon is a man on whom I can rely. = நான் நம்பக்கூடிய ஒரு மனிதன் ஜான்.
(ஜான் ஒரு மனிதன் யாரை நான் நம்பக்கூடியதோ.)
-
The student whose answer was wrong turned bright red. = தவறாகப் பதிலளித்த மாணவர் சிவப்பு பிரகாசமானாா்.
(அந்த மாணவர் யாருடைய பதில் தவறாக இருந்ததோ சிவப்பு பரகாசமானது.)
வரையற்ற பிரதிபெயர்கள் - Indefinite Pronouns
வரையறையற்ற அல்லது நிச்சயமற்ற பெயர்ச்சொற்களைக் குறிப்பதனால் இவை Indefinite Pronouns என அழைக்கப்படுகின்றன.
-
Both are acceptable to me. = எனக்கு இருவரும் ஏற்கக்கூடியவர்கள்.
-
Everything is fine between Sue and Sam. = சூ(ய்) மற்றும் சாம் இடையே எல்லாம் நன்றாக இருக்கிறது.
-
Someone has taken my new chemistry book. = யாரோ எனது இரசாயனவியல் புத்தகத்தை எடுத்துவிட்டார்கள்.
-
Have you told anyone about the treasure map? = நீங்கள் புதையல் வரைபடம் பற்றி யாரிடமாவது சொன்னீர்களா?
-
Somebody ate my sandwich! = யாரோ எனது ரொட்டியை சாப்பிட்டுவிட்டாா்கள்.
-
Everybody is busy finishing the quiz. = எல்லோரும் விடுகதை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
-
We knew that no one had eaten the salami. = ஒருவரும் சலாமி சாப்பிடவில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
-
I don't have any, but John has some. = என்னிடம் எதுவுமில்லை, ஆனால் ஜானிடம் கொஞ்சம் (சில) இருக்கின்றன.
-
You may have either. = உங்களிடம் ஏதாவதொன்று இருக்கும்.
-
இந்த உதாரணங்களை அவதானித்தீர்களாயின், எதுவுமே நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளதை உணரலாம் அதாவது குறிப்பிட்டு இவர்தான் அல்லது இதுதான் என்று கூறமுடியாதுள்ளது.