Nouns - பெயா்ச்சொற்கள்
-
Common nouns - பொதுப் பெயர்
-
Proper Nouns - விசேடபெயர் / உரித்தான பெயா்
என இரண்டு பிரதான வகைகளாகப் பிரிக்கப்படும். அவற்றுள் பொதுப்பெயர் எனப்படுவது பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
-
Abstract nouns - பண்புப்பெயா் அல்லது குணப்பெயா்
-
Collective nouns - கூட்டுப்பெயா்
-
Compound nouns - கலவைப்பெயா்
-
Concrete nouns - திடப்பெயா்
-
கணக்கிடு பெயர் = Countable nouns
-
Uncountable nouns (mass nouns) - கணக்கிடமுடியாப் பெயா்
-
Gender-specific nouns - பாலுணா்த்தும் பெயா்
-
Gerunds / Verbal nouns - தொழிற்பெயா் / வினைப்பெயா்
நபர்கள், இடங்கள், விலங்குகள், பொருட்கள், தரம் / தன்மை, செயல் போன்றவற்றைக் குறிக்கும் சொல்லே பெயர்ச்சொல் எனப்படும்.
Common nouns - பொதுப்பெயர்
மக்கள், இடங்கள், பொருட்கள், விலங்குகள் என்பவற்றின் பெயர்கள் பொதுப்பெயராகும். ஆனால் மக்கள் எனும்போது, தனிப்பட்டஒருவரின் பெயரல்ல. மனிதன், பெண், சிறுவன், சிறுமி, மாணவன் என்பன பொதுப்பெயர். ஒருவரின் பெயர் (கந்தையா, முருகா, இரவி, மஞ்சுளா என்பன) விசேட / உரித்தான பெயர் (Proper noun) எனப்படும்.)
உ+ம்:
-
இடங்கள்:
-
bank = வங்கி
-
school = பாடசாலை
-
city = பட்டணம்
-
shop = கடை
-
park = பூங்கா
-
-
பொருட்கள்:
-
pencil = பென்சில்
-
book = புத்தகம்
-
chair = கதிரை
-
table = மேசை
-
bag = பை
-
-
உயிரினங்கள்:
-
tiger = புலி
-
bear = கரடி
-
fish = மீன்
-
snake = பாம்பு
-
dog = நாய்
-
ஒரு வசனத்தின் தொடக்கத்திலோ அல்லது ஒரு தலைப்பின் பகுதியாக வந்தாலே தவிர பொதுப்பெயர் பெரிய எழுத்தில் தொடங்கமாட்டா. பொதுப்பெயருக்கு ஒரு வசனத்தில் முக்கியத்துவம் கொடுத்து அதை பெரிய எழுத்தில் எழுதுவது சாதாரணமாக தவறானதாகும்.
-
It is the largest Church in Birmingham. = இது பேர்மிங்ஹாமில் பெரிய தேவாலயம்.
-
இங்கே church என்பது பொதுப்பெயர், எனவே சிறிய எழுத்தில் எழுதுவதே சரியானதாகும்.
Abstract nouns - பண்புப்பெயா்
உங்களால் தொட்டு உணரவோ அல்லது பார்க்கவோ முடியாதது.
உ+ம்:
-
bravery = வீரம்
-
joy = மகிழ்ச்சி
-
skill = திறமை
-
opinion = கருத்து
-
law = சட்டம்
-
ego = தன்முனைப்பு
-
peace = அமைதி
Collective nouns - கூட்டுப்பெயா்
(ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களோ, விலங்குகளோ, பொருட்களோ) கூட்டம் அல்லது குழுக்களை்க் குறிக்கும் பெயர்கள் "கூட்டுப் பெயர்ச்சொற்கள்" என்றழைக்கப்படும்.
உ+ம்:
-
army = இராணுவம் (பல வீரர்களைக் குறிக்கும் சொல்)
-
class = வகுப்பு (பல மாணவர்கள் கற்கும் இடம்)
-
gang = கும்பல் (பலரைக் குறிக்கும்)
-
colony = குடியேற்றப் பகுதி/ குடியேற்ற நாடு
-
school = பாடசாலை
Compound nouns - கலவைப் பெயா்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் பெயர்ச்சொற்கள் "கலவைப் பெயர்ச்சொற்கள் எனப்படும்.
உ+ம்:
-
pickpocket = பொக்கட் அடிப்பவன் / முடிச்சுமாறி
-
water bottle = தண்ணீர்ப்போத்தல்
-
blackboard = கரும்பலகை
-
homeland = தாய்நிலம்
-
swimming pool = நீச்சற்தடாகம்
-
brother-in-law = மைத்துனர்
-
haircut = தலைமுடி வெட்டுதல்
Concrete nouns - திடப்பெயா்
கண்ணால் பார்த்தும் கையால் தொட்டும் உணரக்கூடியவற்றை "திடப் பெயர்சொற்கள்" எனலாம். இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ விசேட உரித்தான பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடும் பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.
உ+ம்:
-
tree = மரம்
-
cloud = மேகம்
-
ball = பந்து
-
nose = மூக்கு
-
face = முகம்
-
book = புத்தகம்
Countable nouns - கணக்கிடு பெயர்
கணக்கிடு பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடு பெயர்ச்சொற்களாகம்.
கணக்கிடு பெயர்கள் ஒருமையாகவோ, பன்மையாகவோ இருக்கலாம். இவற்றை ஒன்று, இரண்டு, மூன்று எனப் பாவிக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் ஒன்று என்பதற்கு a / an தான் பாவிக்கப்படும். உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஒன்று என்பதைக் குறிப்பிட an யும், ஏனையவற்றுக்கு முன்னால் a உம் பாவிக்கப்படும். சில சொற்கள் விதிவிலக்காகவும் உள்ளன. அவற்றை பின்னர் article என்ற பகுதியிலும், singular, plural என்ற பகுதியிலும் பார்ப்போம். தவிர இவற்றை ஒன்று, இரண்டு என்று பாவிப்பது போன்று, சில (some) / பல (many) / ஏதாவது (any) / ஒரு கொஞ்சம் அல்லது ஒருசில (a few) என்று பாவிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
I need to buy some new shirts = நான் கொஞ்ச சேட் வாங்கவேண்டும்.
Have you got any books? = உன்னிடம் ஏதாவது புத்தகம் இருக்கறதா?
I've got a few dollars. = என்னிடம் கொஞ்ச டொலர் கிடைத்திருக்கின்றன.
I have got many pens. = என்னிடம் பல பென்கள் உள்ளன.
உ+ம்:
-
apple = அப்பிள் பழம்
-
dollar = டொலர்
-
book = புத்தகம்
-
spoon = கரண்டி
-
computer = கணனி
Uncountable nouns (mass nouns) - கணக்கிடமுடியாப் பெயா்
எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாத சொற்கள் எல்லாமே "கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன.
உ+ம்:
-
food = சாப்பாடு / உணவு
-
music = சங்கீதம்
-
love = அன்பு / காதல்
-
water = தண்ணீர்
-
happiness = மகிழ்ச்சி
-
smoke = புகை
-
milk = பால்
சாதாரணமாக இவை ஒருமையாகவே கருதப்படுகின்றன. இவற்றை அளவிடும் விதத்திலேயே இவை கணக்கிடப்படுகின்றன.
உ+ம்:
-
a liter of milk = ஒரு லீட்டர் பால்
-
a bottle of milk = ஒரு போத்தல் பால்
-
a glass of water = ஒரு கிளாஸ் தண்ணீர்
-
a bottle of wine = ஒரு போத்தல் வைன்
-
a spoon of sugar = ஒரு கறண்டி சீனி
-
a slice of cheese = ஒரு சீவல் துண்டு சீஸ்
-
a chunk of cheese = ஒரு பாலம் சீஸ்
-
a piece of cheese = ஒரு துண்டு சீஸ்
-
a piece of meat = ஒரு துண்டு இறைச்சி
-
a slice of meat = ஒரு சீவல் துண்டு இறைச்சி
-
a pound of meat = ஒரு இறாத்தல் இறைச்சி
-
a bar of butter = ஒரு நீளத்துண்டு பட்டர்
-
a bottle of ketchup = ஒரு போத்தல் கெச்சப்
-
a tube of mustard = ஒரு ரியூப் (குழாய்)கடுகுப்பசை
-
a kilo of rice = ஒரு கிலோ அரிசி
-
a plate of rice = ஒரு பிளேட் சோறு
Gender-specific nouns - பாலுணா்த்தும் பெயா்
இவை ஆண்பால் (Masculine Gender), பெண்பால் (Feminine Gender), பொதுப்பால் (Common Gender), பாலற்ற ((பாகுபாடற்ற) ௐன்றன்பால், பலவின்பால் அஃறினை) (Neuter Gender) என்று நான்கு பிரிவுகளாக வகுக்கப்படும். உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆண் / பெண் இனங்களாகத்தான் இருக்கும். ஆனால் சில சமயங்களில் பொதுவாகக் குறிப்பிடும்போது அவற்றை நாம் இனங்கண்டுகொள்ள முடியாது. உதாரணமாக சிறுவர், குழந்தை, மக்கள் போன்றவற்றைக் கூறலாம். ஆண், பெண் இரண்டு பால்களுக்கும் பொதுவாக உள்ளதால் அவை பொதுப்பால் என்படும். சடப்பொருட்கள் அதாவது உயரற்ற பொருட்களுக்கு (அஃறினை) பாலற்றதென்பதால் அவை "Neuter Gender" என அழைக்கப்படும்.
ஆண் இனத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் ஆண்பால் எனப்படும்.
-
ஆண்களையும், இளைஞர்கள், பையன்களையும், ஆண்இன விலங்குகளையும் குறிக்கும் சொற்கள் ஆண்பால் எனப்படும்.
பெண் இனத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பெண்பால் எனப்படும்.
-
பெண்களையும், யுவதிகள், சிறுமிகளையும், பெண்இன விலங்குகளையும் குறிக்கும் சொற்கள் பெண்பால் எனப்படும்.
-
பெயர்ச்சொல்லின் இறுதியில் -ess, -ress என்பவற்றில் முடியும் சொற்கள் பெண்பாற் சொற்களாகும்.
ஆனால் பெண்பாற்சொற்களெல்லாம் -ess, -ress இல் தான் முடியுமென்றில்லை
உ+ம்:
இங்கே சில விலங்குகளைக் குறிக்கும் ஆண்பால், பெண்பால் பெயர்ச்சொற்கள் உள்ளன.
Common Gender nouns - பொதுப்பாற்பெயர்
மேலே நான் குறிப்பிட்டது போன்று இரண்டு பால்களுக்கும் பொதுவாக உள்ளதால் இவை பொதுப்பாற்பெயர் என அழைக்கப்படுகின்றன.
உ+ம்:
-
baby = குழந்தை
-
bird = பறவை
-
cat = பூனை
-
cattle = கால்நடை
-
child = குழந்தை
-
companion = துணை
-
comrade = தோழர்
-
cousin = தகப்பன் /தாயின் உடன்பிறந்தவரின் பிள்ளை
-
dancer = நடனக்கலைஞர்
-
deer = மான்
-
friend = நண்பர்
-
guardian = காப்பாளர்
-
guest = விருந்தினர்
-
infant = குழந்தை
-
owner = உரிமையாளர்
-
parent = பெற்றோர்
-
passenger = பயணி
-
pig = பன்றி
-
president = ஜனாதிபதி
-
pupil = மாணவர்
Neuter Gender - (ஆண், பெண்) பாலற்ற பெயர்ச்சொற்கள்
ஆண்பாலையோ அன்றி பெண்பாலையோ குறிக்காத பொதுவான சொற்களே இவை. அதாவது பாலுணர்த்தாத சொற்கள். இவை Neuter Gender எனப்படும். இந்தச் சொற்களை நீங்கள் அவதானித்தால் அனைத்தும் அஃறினைப் பெயா்ச்சொற்களாகவே இருக்கும்.
உ+ம்:
-
bench = வாங்கு
-
leaves = இலைகள்
-
mirror = கண்ணாடி
-
fire = தீ
-
waterfall = நீர்வீழ்ச்சி
-
ball = பந்து
-
forest = காடு
-
building = கட்டிடம்
-
gymnasium = உடற்பயிற்சி சாலை
-
broom = விளக்குமாறு
-
playground = விளையாட்டு மைதானம்
-
cake = கேக்
-
rock = மலை
-
computer = கணனி
-
sky = வானம்
-
card = அட்டை
-
socks = காலுறை
-
floor = தரை
-
wind = காற்று
Gerunds / Verbal nouns - தொழிற்பெயா் / வினைப்பெயா்
வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லாக மாறுகின்ற சொற்கள் தொழிற்பெயர் அல்லது வினைப்பெயா் என்று அழைக்கப்படும்.
உ+ம்:
-
smoking = புகைத்தல் / புகைப்பிடித்தல் (smoke என்ற வினையிலிருந்து தோன்றியது.)
-
collecting = சேகரித்தல் (collect என்ற வினையிலிருந்து தோன்றியது.)
-
shopping = வாங்குதல் (shop என்ற வினையிலிருந்து தோன்றியது.)
-
eating = சாப்பிடுதல் / உண்ணுதல் (eat என்ற வினையிலிருந்து தோன்றியது.)
-
working = வேலைசெய்தல் (work என்ற வினையிலிருந்து தோன்றியது.)
-
Smoking is bad for your health. = புகைப்பிடித்தல் உனது உடல்நலத்திற்கு தீங்கானது.
-
A popular hobby in England is stamp-collecting. = தபால்தலை சேகரித்தல் இங்கிலாந்தில் செல்வாக்கப் பெற்ற பொழுதுபோக்கு.
-
I dislike shopping. = பொருட்கள் வாங்குதல் எனக்கு விருப்பமற்றது / வெறுப்பானது
-
She doesn't enjoy working on Sundays. = ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதில் அவளுக்கு சந்தோசமில்லை.
-
She stopped eating. = அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள். (அவள் இனிமேலும் சாப்பிடமாட்டாள் - இங்கே வினைப்பெயர்)
-
She stopped to eat. = அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள். (அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள் - இங்கே வினையெச்சம் அதாவது அந்தச் செயல் முற்றுப்பெறவில்லை)
-
Proper Nouns - விசேடபெயர் / உரித்தான பெயா்
-
குறிப்பிட்ட ஒரு பொருள், இடம், நபர், மதம், மொழி, மாதம், ஊர், நாடு போன்றவற்றின் உரித்தான பெயர்களே "விசேடபெயர் / உரித்தான பெயர்ச்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன.
-
உரித்தான பெயர்ச்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து பெரிய எழுத்திலேயே (Capital letter) வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இடங்கள்
-
London = இலண்டன்
-
Jaffna = யாழ்ப்பாணம்
-
California = கலிபோனியா
-
Kilinochchi = கிளிநொச்சி
-
Madurai = மதுரை
மலைகள், ஆறுகள்:
-
மலைகள், கடல்கள், ஆறுகள், வாய்க்கால்களின் பெயர்கள் விசேட பெயராகும்.
அதாவது, பொதுவாக மலை அல்லது ஆறு எனும்போது அது பொதுப்பெயா். ஆனால் பெயரிடப்பட்ட மலைகள், ஆறுகள் யாவும் விசேட பெயராகும்.
-
Lake Michigan = மிச்சிகன் ஏரி
-
the Alps = ஆல்ப்ஸ்
-
the Himalayas = இமயமலை
-
the Indian Ocean = இந்து சமுத்திரம்
-
Mount Fuji = மவுண்ட் ஃபுஜி
-
the Yellow River = மஞ்சள் ஆறு
-
Mount Everest = எவரெஸ்ட் சிகரம்
நபர்கள்:
-
Sarmilan = சர்மிலன்
-
Surya = சூர்யா
-
Tamilvaanan = தமிழ்வாணன்
-
Kavitha = கவிதா
-
David = டேவிட்
நாடும் நாட்டுமக்களும்:
மொழிகள்:
-
Tamil = தமிழ்
-
English = ஆங்கிலம்
-
French = பிரஞ்சு
-
Chinese = சீனம்
-
Cantonese = கந்தோனிஸ்
மதங்கள்:
-
Hindu = இந்து
-
Christian = கிறிஸ்தவம்
-
Islam = இஸ்லாம்
-
Buddhist = பௌத்தம்
-
Taoism = டாவோயிசம்
மாதங்கள்:
-
January = ஜனவரி
-
September = செப்டெம்பர்
-
December = டிசெம்பர்
வாரநாட்கள்:
-
Monday = திங்கள்
-
Wednesday = புதன்
-
Sunday = ஞாயிறு
விசேட தினங்கள்:
-
Poya day = பூரணை தினம்
-
New Year day = புதுவருட தினம்
-
May day = தொழிலாளர் தினம்
the, of, an, in போன்ற சொற்கள் விசேட பெயரில் / உரித்தான பெயரில் வந்தால் அவை ஒருபோதும் பெரிய எழுத்தில் வரமாட்டா.
-
I must visit the Tower of London. = நான் லண்டன் கோபுரத்தைப் பார்க்க வேண்டும்.
-
இங்கே the வும் of உம் முக்கியமான சொற்களல்ல, எனவே அவை பெரிய எழுத்தில் வரமாட்டா.
-
பொதுப்பெயருக்கும் விசேட / உரித்தான பெயருக்கம் இடையேயான பாகுபாடு / வித்தியாசத்தை கீழேயுள்ள அட்டவணையில் காண்க.
Masculine - ஆண்பால்
actor = நடிகன்
author = ஆசிரியர்
bachelor = இளங்காளை
boy = சிறுவன்
bridegroom = மணமகன்
brother = சகோதரன்
brother-in-law = மணவழி மைத்துனன்
conductor = நடத்துனர்
father-in-law = மணவழி மாமா
Feminine - பெண்பால்
actress = நடிகை
authoress = ஆசிரியை
spinster = கன்னிப்பெண்
girl = சிறுமி
bride = மணமகள்
sister = சகோதரி
sister-in-law = மணவழி மைத்துனி
conductress = நடத்துனர்
mothe-in-law =மணவழி மாமி
Country - நாடு
America
Egypt
India
Itay
Japan
Korea
Malaysia
Pakistan
France
Sri Lanka
Thailand
People - நாடுகளில் வாழும் மக்கள்
பன்மை
Americans
Egyptians
Indians
Italians
Japanese
Koreans
Malaysians
Pakistanis
the French
Srilankans
Thais
ஒருமை
American
Egyptian
Indian
Italian
Japanese
Korean
Malaysian
Pakistani
French
Srilankan
Thai
Animal
Male
chicken
cattle
deer
donkey
duck
fox
goose
horse
lion
sheep
tiger
rooster
bull
buck
jack
drake
fox
gander
stallion
lion
ram
tiger
Female
தமிழ்
hen
cow
doe
jenny
duck
vixen
goose
mare
lioness
ewe
tigress
கோழி
(கால்நடை) மாடு
மான்
கழுதை
வாத்து
நரி
வாத்து
குதிரை
சிங்கம்
ஆடுகள்
புலி
Common nouns
பொதுப்பெயர்
Proper Nouns
விசேடபெயர் / உரித்தான பெயா்
man = மனிதன்
woman = பெண்
boy = சிறுவன்
girl = சிறுமி
actor = நடிகன்
actress = நடிகை
city = நகரம்
town = பட்டிணம் / நகரம்
country = நாடு
sea = கடல்
ocean = சமுத்திரம்
mountain = மலை
shop = கடை
school = பாடசாலை
road = சாலை
street = தெரு
lane = ஒழுங்கை
capital = தலைநகர்
day = நாள்
month = மாதம்
holiday = விடுமுறை
festival day = பண்டுகை நாள்
public holiday = பொதுவடுமுறை
dog = நாய்
child = குழந்தை
book = புத்தகம்
language = மொழி
building = கட்டிடம்
Kandiah = கந்தையா
Luxmi = லக்ஸ்மி
Rajah = ராஜா
Vani = வாணி
Rajani = ரஜனி
Roja = ரோஜா
Colombo = கொழும்பு
Jaffna = யாழ்ப்பாணம்
Srilanka = இலங்கை
Red Sea = செங்கடல்
Indian Ocean = இந்துசமுத்திரம்
Himalaya = இமயமலை
Food City = பூட்சிட்டி
Hindu College = இந்துக்கல்லூரி
Temple Road = கோவில் வீதி
Main Street = பிரதான வீதி
B.A. Thambi Lane = பீ.ஏ.தம்பி ஒழுங்கை
Jayawardenepura = ஜயவர்த்தனபுரம்
Sunday = ஞாயிற்றுக்கிழமை
August = ஆகஸ்ட்
4th of February = பெப்ரவரி 4ம் திகதி
New Year Day = புதுவருட தினம்
Poya day = பௌர்ணமி தினம்
Brown = பிறவுன்
Meena = மீனா
Mahabaradha = மகாபாரதம்
Tamil = தமிழ்
L.B.C. Builing = எல்.பீ.சீ கட்டிடம்