The Articles - பெயர்சொற்குறிகள்
பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களைக் குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனைத் தமிழில் சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்குறிகள் மூன்று மட்டுமே உள்ளன.
-
அவைகளாவன: a, an / the
இவை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
-
Indefinite Articles - நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்
-
Definite Article - நிச்சயப் பெயர்சொற்குறி
Indefinite Articles - நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்
ஆங்கிலத்தில் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் (ஒரு/ஓர்) 'a' / 'an' என 2 உள்ளன. ஒரு குறிப்பிடப்படாத ஒரு பொருளையோ, நபரையோ, இடத்தையோ, விடயத்தையோ பற்றி பேசும் பொழுது, 'a' அல்லது 'an' பாவிக்கப்படும்.
-
இவை ஒருமையில் வரும் பெயர்ச்சொற்களுக்கு முன்னாலேயே பாவிக்கப்படும்.
-
(தமிழில் உயிர்எழுத்துக்களில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் 'ஒரு” என்று வராது 'ஓர்” என்று வருவது போன்று, ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளைக் கொண்டு ஆரம்பிக்கும் பெயா்ச்சொற்களுக்கு முன்னால் 'an' பாவிக்கப்படும், ஏனையவற்றிற்கு முன்னால் 'a' பாவிக்கப்படும்.)
This is a picture of an elephant.
இது ஒரு யானையின் படம்.
Kannan is reading a book.
கண்ணன் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறான்.
Mom bought me a new dress today.
அம்மா, இன்று எனக்கு ஒரு புதிய ஆடை வாங்கினாா்.
You will need an umbrella when you go out.
நீங்கள் வெளியே செல்லும்போது, ஒரு குடை தேவை.
She eats an apple a day.
அவர் ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் சாப்பிடுவாா் (சாப்பிடுகிறவா்).
Can you hear a bird singing ?
ஒரு பறவை பாடுவதை உங்களால் கேட்க முடிகிறதா?
Do you wear a uniform to school?
நீங்கள் பாடசாலைக்கு சீருடை அணிவதுண்டா?
I met a friend.
நான் ஒரு நண்பனைச் சந்தித்தேன்.
I work in a factory in New York.
நான் நியூயார்க்கில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறேன்.
I borrowed a pencil from a passenger sitting next to me.
எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒரு பயணியிடமிருந்து நான் ஒரு பென்சில் கடன் வாங்கினேன்.
-
வியப்பிடையாக கணக்கிடக்கூடிய ஒருமைப் பெயர்ச்சொற்கள் வரும்போது, முன்னால் 'a'/'an' பாவிப்போம்.
What a pretty girl! (தவறு What pretty girl!)
What a sweet song!
-
கணக்கிடமுடியாப் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் 'a'/'an' பாவிக்கமுடியாது.
What nonsense! (தவறு What a nonsense!)
-
'h' சத்தமில்லாது (ஒலியின்றி) வரும்போது 'an' பாவிப்போம். ('a' அல்ல )
It's an honor to meet you (தவறு It's a honor to meet you.)
-
உயிரெழுத்து சத்தமில்லாது (ஒலியின்றி) வரும்போது 'a' பாவிப்போம். ('an' அல்ல )
My dad belongs to a union. (தவறு "My dad belongs to an union.)
(you nee un.) என்றே உச்சரிக்கப்படுகிறது.
-
'a' அல்லது 'an' கணக்கிடக்கூடிய பெயா்ச்சொற்களுடனே மட்டுமே பாவிக்கப்படும்.
I’d like a piece of cake. - நான் கேக் ஒரு துண்டு விரும்புகிறேன்.
I lent him a book. - நான் அவருக்கு ஒரு புத்தகம் கடன் கொடுத்தேன்.
I drank a cup of tea. - நான் ஒரு கப் தேநீா் குடித்தேன்.
Definite Article -நிச்சயப் பெயர்சொற்குறி
ஆங்கிலத்தில் நிச்சயப் பெயர்ச்சொற்குறி 'The' என்ற ஒன்று மட்டுமே உள்ளது.
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசும்போது, அது “நிச்சயப் பெயர்சொற்குறி” எனப்படும். தமிழில் “அந்த, இந்த” என்று குறித்துப் பேசுவதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல் (The) எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். அத்துடன் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை, குறிப்பிடப்பட்ட பொருளை, குறித்த உயிரினத்தை அல்லது குறித்த இடத்தை குறித்துக்காட்டவும் பயன்படும்.
ஒரு குறிப்பிட்ட பொருளையோ, நபரையோ, இடத்தையோ, விடயத்தையோ பற்றிப் பேசும் பொழுது, இருதரப்பிலும் தெரிந்திருக்கும் பட்சத்தில் 'the' பாவிக்கப்படும்.
-
உயிரெழுத்துக்களை ஒரு சொல்லின் ஆரம்ப எழுத்தாகக் கொண்டு தொடங்கும் பொழுது, 'the' என்பது 'த' என உச்சரிக்கப்பட மாட்டா. 'தி' என்றே உச்சரிக்கப்படும்.
-
இது ஒருமையிலோ பன்மையிலோ வரும் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் வரும்.
The telephone is ringing.
தொலைபேசி அடிக்கிறது.
Where’s the cat?
பூனை எங்கே?
I think she is under the bed.
அவள் கட்டிலின் கீழ் என்று நான் நினைக்கிறேன்.
Ram has won the race.
ராம் ஓட்டப்பந்தயத்தில் வென்றுள்ளாா்.
The ice is melting.
பனி உருகுகின்றது.
Granny is sitting in the garden.
பாட்டி தோட்டத்தில் உட்கார்ந்திருக்கிறாா்.
The street is very busy today.
அந்தத் தெரு இன்று மிகவும் ஓய்வின்றியிருக்கிறது.
The sky is getting dark.
வானம் இருண்டு கொண்டு வருகிறது.
The car over there is fast.
அந்தக் காா் அங்கே வேகமாகச் செல்கிறது.
The president of the United States is giving a speech tonight.
அமெரிக்க ஜனாதிபதி இன்றிரவு ஒரு உரை நடத்துகிறாா்.
-
ஒரு விடயத்தைப்பற்றி நாம் முதற்தடவையாகப் பேசும்பொழுது, 'a' / 'an' பாவிப்போம்.
-
மீண்டும் அதே விடயத்தைப்பற்றிப் பேசும்பொழுது, 'the' பாவிக்கப்படும்.
I live in a house. The house is quite old and has four bedrooms.
நான் ஒரு வீட்டில் வாழ்கின்றேன். அது மிகப் பழையது, நான்கு படுக்கை அறைகள் உள்ளன.
I ate in a Chinese restaurant. The restaurant was very good.
நான் ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டேன். அந்த உணவகம் மிகவும் நன்றாக இருந்தது.
-
ஒன்றேயொன்றாக இருக்கும் பெயர்ச்சொற்களுக்கு முன்னால் 'the' பாவிக்கப்படும்.
the sun - சூரியன்
the moon - சந்திரன்
the sky - வானம்
the front door of my house - என் வீட்டின் முன் கதவு
-
நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், மாகாணங்கள், ஏரிகள் மற்றும் மலைகளின் பெயா்களின் முன்னால் பெயர்சொற்குறிகள் பாவிக்கப்படமாட்டா.
He lives in Washington near Mount Rainier.
அவர் மவுண்ட் ரெய்னர் அருகே வாஷிங்டனில் வாழ்கிறார்.
They live in Northern British Columbia.
அவர்கள் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்கின்றனர்.
They climbed Mount Everest.
அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறினாா்கள்.
-
சாதாரணமாக பன்மைப்பெயா் மற்றும் கணக்கிடமுடியாப் பெயா்ச்சொற்களின் முன்னால் பொதுவாக பெயர்சொற்குறிகள் பாவிக்கப்படமாட்டா.
He writes books.
அவர் புத்தகங்களை எழுதியுள்ளார்.
She likes sweets.
அவளுக்கு இனிப்பு பிடிக்கும்.
Do you like jazz music?
உங்களுக்கு ஜாஸ் இசை விருப்பமா?
She ate bread with butter in the morning.
அவள் காலையில் பட்டருடன் பாண் சாப்பிட்டாள்.
-
ஆங்கிலத்தில் கணக்கிடக்கூடிய, மற்றும் கணக்கிடமுடியாப் பெயா்ச்சொற்களுடன் பெயர்சொற்குறிகள் பாவிப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும்.
-
'the' கணக்கிடமுடியாப் பெயா்ச்சொற்களுடன் பாவிக்கப்படலாம் அல்லது மேலே குறிப்பிட்டதுபோல் முற்றாகக் கைவிடப்படலாம்.
“The two countries reached the peace after a long disastrous war”
"இரு நாடுகளும் ஒரு நீண்ட பேரழிவுப் போரின் பின்னர் சமாதானம் அடைந்தது"
(குறிப்பிட்ட அல்லது செய்துகொண்ட ஒப்பந்தப்படி) அல்லது “The two countries reached peace after a long disastrous war” ஏதாவது சமாதானம்.
“He drank the water”
அவா் அந்த நீரை அருந்தினாா்.
(குறிப்பிட்ட சிறிது நீர் - உதாரணமாக, அவருடைய மனைவி சமையலறையிலிருந்து கொண்டுவந்த நீா்) அல்லது “He drank water.” (ஏதாவது நீா்)
-
இடங்களின் பெயர்களுக்கு முன்னால் எப்பொழுதும் 'the' வரும்.
-
கடல்கள்
the Pacific
the Atlantic
-
மலைகள்
the Alps
the Himalayas
-
தீவு குழுக்கள்
the West Indies
-
ஆறுகள்
the Nile
the Amazon
the Thames
-
பாலைவனங்கள்
the Sahara
the Atacama
-
பொதுவாக கண்டங்கள், நாடு, மாநிலங்கள், துறைகள் ஆகியவற்றின் பெயர்களோடு 'the' பயன்படுத்தவில்லை.
Asia, India, France, Texas, Beijing etc
-
விதிவிலக்காக மாநிலங்களின் கூட்டாக அமைந்த அமெரிக்கா போன்றவற்றிற்கு மட்டும் 'the' பாவிக்கப்படும்.
the United States
the People’s Republic of China
the United Kingdom
the Netherlands
the Hague