English grammar
ஆங்கில இலக்கணம்
அடிப்படை ஆங்கிலம் - Basic of English
alphabets - எழுத்துத்தொகுதி (நெடுங்கணக்கு)
capital letter / majuscule / block letter / big letter / upper case - பெரிய எழுத்து
(தட்டச்சுகக்களிலும் கணனியிலும் பயன்படுகின்ற அச்செழுத்து)
A, B, C. D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
script - கையெழுத்து
A, B, C. D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
பெரிய எழுத்து எங்கே, எப்போது உபயோகிக்கப்படும்:
-
ஒரு வசனத்தின் தொடக்கத்தில்
-
The dog is barking. - அந்த நாய் குரைக்கிறது.
-
Come here! - இங்கே வா!
-
-
எப்பொழுதும் I என்ற எழுத்து சொல்லாக வரும்பொழுது
-
I am eight years old. - எனக்கு எட்டு வயது.
-
Tom and I are good friends. - நானும் டொம்மும் நல்ல நண்பா்கள்.
-
-
விசேட பெயர்களின் தொடக்கத்தில்
-
நபா்களின் பெயர்களின் தொடக்கத்தில் அல்லது நபா்களின் பெயா்கள்
-
Kandiah, Mala, Vani, Ramesh, Kannan
-
-
-
இடங்களின் பெயர்கள்
-
Dehiwala Zoo -டெஹிவளை மிருகக்காட்சிசாலை
-
London - லண்டன்
-
Jaffna - யாழ்ப்பாணம்
-
Colombo - கொழும்பு
-
-
மாதங்களின் பெயர்கள், கிழமைநாட்களின் பெயர்கள், கொண்டாட்ட தினங்கள், விடுமுறை தினங்கள், விசேட தினங்கள்
-
New Year’s Day, Christmas, Labor Day, Mother’s Day, Sunday, Monday, Friday, January, May, July, October
-
சுருக்கக்குறியீடுகள் - acronyms (abbreviations)
சுருக்கக்குறியீடு எனப்படுவது, நீண்ட ஒரு விசேட பெயரின் அல்லது தலைப்பின் ஒவ்வொரு சொற்களின் முதல் எழுத்துக் களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. சிலவேளைகளில் அவை முற்றுப்புள்ளி வைத்து பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில வேளைகளில் அவை சிறிய எழுத்திலும் வரும்.
-
Jan. = January - ஜனவரி
-
a.m. = ante meridiem (before noon) - முற்பகல்
-
etc. = et cetera (and so on; and others)- முதலியன
-
e.g. = exampli gratia (i.e.; for example) - உதாரணமாக
-
i.e. = id est (that is) - அதாவது
-
p.m. = post meridiem (after noon) - பிற்பகல்
-
P.M. = Prime Minister - முதல் மந்திரி
-
NATO = the North Atlantic Treaty Organization - வட அட்லான்றிக் ஒப்பந்த அமைப்பு
small letter / minuscule / lower case -சிறிய எழுத்து
(தட்டச்சுகக்களிலும் கணனியிலும் பயன்படுகின்ற அச்செழுத்து)
a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
script - கையெழுத்து
a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
vowels - உயிர் எழுத்துக்கள்
a, e, i, o, u
semi-vowel - அரை உயிர் எழுத்து
y
இந்த ‘y’ என்ற எழுத்து பெயர்களிலும், இடங்களிலும் வரும்பொழுது, மெய்யெழுத்தாகிய ‘j’ இற்குப் பதிலாகவும் உயிர் எழுத்தாகிய ‘i’ இற்குப் பதிலாகவும் உபயோகிக்கலாம். எனவேதான் இது அரை உயிர் எழுத்தென்று அழைக்கப்படு கின்றது.
உதாரணம்:
-
Soundaranayaki
-
Soundaranayaky
-
Soundaranajaki
-
Soundaranajaky
-
Joganathan
-
Yoganathan
-
study - studies (படிப்பு)
-
body - bodies (உடல்)
consonants - மெய் எழுத்து
மேற்குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் தவிர்ந்த அனைத்து எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். உயிர் இன்றி எமது மெய் என்று அழைக்கப்படும் உடம்பு எப்படி இயங்காதோ அதுபோன்றே இந்த மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் இன்றி ஓசை தரமாட்டா. (b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z)
letters (எழுத்துக்கள்)
|
words (சொற்கள்)
|
prases (சொற்றொடர்கள் அதாவது முற்றுப்பெறாத வசனம்) / clouse (வாக்கியத்தின் உட்பிரிவு)
|
sentences (வசனங்கள்)
|
paragraphs (பத்திகள்)
எழுத்துக்கள் சோ்ந்து சொற்களாகும். சொற்கள் சோ்ந்து சொற்றொடர்களாகும். சொற்றொடர்கள் சேர்ந்து வசனங்களாகும். வசனங்கள் சேர்ந்து பத்திகளாகும்.
(ஒரு வசனத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என மூன்று பகுதிகளோ அல்லது எழுவாய், பயனிலை என இரண்டு பகுதிகளோ காணப்படும்.)